கவிதைக்குப் பொருள் தந்தக் கலைவானி நீயா?
என் கனவோடு கேட்கின்றக் கால் சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா?
எனை பேசாமல் செய்கின்ற மெளனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தில் முதல் பூவும் நீதான்
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழை நீதான்
இரவோடு நான் காணும் ஒலிவட்டம் நீதான்
என் இருக்கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்
தூரத்தில் மயில் இறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்
காதலுக்கு கண் திறந்து விட்டவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்
கண்டிப்பதால் ...
நெஞ்சைத் தண்டிப்பதால்...
தலையைத் துண்டிப்பதால்...
தீராது என்காதல் என்பேன்
நீ தீயள்ளித் தின்னச்சொல் தின்பேன்
உண்டென்று சொல் இல்லை நில் என்று கொல்
எனை வா வென்று சொல் இல்லை போ என்று கொல்
ஆம் என்றால் உள்ளதடி சொர்க்கம்
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்.
Saturday, September 2, 2006
Sunday, July 16, 2006
நிழலின் அருமை...
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பதன் பொருளை இப்போது தெளிவாக உணர்கிறேன். பணிபுரிய தமிழ்நாட்டை விட்டு வந்திருக்கும் பரிதாபத்திற்குரியவர்களில் நானும் ஒருவன். அன்றுமுதல் தமிழிடமிருந்து தனிமைபடுத்தப்பட்ட உணர்வு என்னுள். ஏதோ விலைமதிப்பில்லாத ஒன்றைத் தொலைத்தது போன்ற கலக்கம்.
இப்பொழுதெல்லாம் யாராவது தமிழில் பேசுவதைக் கேட்டால் அப்படியே அங்கேயே நின்று விடுகிறேன். சுமார் 800 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் என்னுடைய மனநிலையே இப்படியிருந்தால் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று பணிபுரிவர்களின் நிலையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.
ஆனால் தமிழ் மணம் போன்ற வலைப்பதிவுகள் என்போன்றவர்களுக்கு மிகசிறந்த வடிகால். தமிழின் அண்மையினை உணரமுடிகிறது.

Saturday, June 24, 2006
முதற்பதிப்பு. . .
தமிழில் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இன்று நிறைவேறியதில் எனக்கு மிக்க மகிழ்சி. கடந்த ஒரு மாதகாலமாக தமிழில் blog எழுதுவது எப்படி என்று ஒரு நீண்ட ஆராய்சியின் பயனே இந்தப் பதிப்பு.
உண்மைய சொல்லப்போனா எழுதுறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு but கொஞ்சநாள்ள கத்துகலாம்னு நம்பிக்கை இருக்கு.
இங்க இதுதான் எழுதனும் அப்படின்னு இல்லாம மனசுல இருக்குற விஷயங்கள எழுதலாமென்றுத் தோன்றுகிறது. என் உணர்வுகளையும் அனுபவங்களையும் பதிவு சைய்வதற்கு தான் இந்த வலைப்பதிவு
நன்றி

Subscribe to:
Posts (Atom)