நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பதன் பொருளை இப்போது தெளிவாக உணர்கிறேன். பணிபுரிய தமிழ்நாட்டை விட்டு வந்திருக்கும் பரிதாபத்திற்குரியவர்களில் நானும் ஒருவன். அன்றுமுதல் தமிழிடமிருந்து தனிமைபடுத்தப்பட்ட உணர்வு என்னுள். ஏதோ விலைமதிப்பில்லாத ஒன்றைத் தொலைத்தது போன்ற கலக்கம்.
இப்பொழுதெல்லாம் யாராவது தமிழில் பேசுவதைக் கேட்டால் அப்படியே அங்கேயே நின்று விடுகிறேன். சுமார் 800 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் என்னுடைய மனநிலையே இப்படியிருந்தால் பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று பணிபுரிவர்களின் நிலையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை.
ஆனால் தமிழ் மணம் போன்ற வலைப்பதிவுகள் என்போன்றவர்களுக்கு மிகசிறந்த வடிகால். தமிழின் அண்மையினை உணரமுடிகிறது.
2 comments:
ஜேம்ஸ்...!
வலையுலகில் உங்கள் வருகை நல்வரவாகுக !
மிக்க நன்றி கண்ணன்.
Post a Comment