கவிதைக்குப் பொருள் தந்தக் கலைவானி நீயா?
என் கனவோடு கேட்கின்றக் கால் சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சத்தங்கள் நீயா?
எனை பேசாமல் செய்கின்ற மெளனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தில் முதல் பூவும் நீதான்
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழை நீதான்
இரவோடு நான் காணும் ஒலிவட்டம் நீதான்
என் இருக்கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான்
தூரத்தில் மயில் இறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்கினியாய் சுட்டவளும் நீதான்
காதலுக்கு கண் திறந்து விட்டவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்
கண்டிப்பதால் ...
நெஞ்சைத் தண்டிப்பதால்...
தலையைத் துண்டிப்பதால்...
தீராது என்காதல் என்பேன்
நீ தீயள்ளித் தின்னச்சொல் தின்பேன்
உண்டென்று சொல் இல்லை நில் என்று கொல்
எனை வா வென்று சொல் இல்லை போ என்று கொல்
ஆம் என்றால் உள்ளதடி சொர்க்கம்
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்.