Saturday, May 19, 2007
பொன்னியின் செல்வன்
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் படிக்க அண்மையில் தான் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன் அவர் எழுதிய சிவகாமியின் சபதம்,அலை ஓசை முதலிய நாவல்களை படித்ததுண்டு. அதனால் கல்கியின் நாவல்களின் மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பதோடு இதற்கு முன் இந்த நாவலை படித்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து கொண்டிருப்பதை பலமுறைக் கேட்டதுண்டு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த நாவலை துவங்கினேன்.
நான் இதுவரை படித்த நாவல்களில் the best இதுதான்...கதையை படிப்பவர்களை அந்த களத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார் கல்கி. கதையை நேரில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நிஜ உலகத்தினையும் மறக்கடித்து விடுகிறது.
நாம் எல்லாம் ஒருவிதத்தில் பாக்கியசாலிகள். நாவலை தொடர்ந்து நம்மால் படிக்க முடியும்...ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் அடுத்தத்ததற்கு உடனே சென்றுவிடமுடியும். ஆனால் கல்கியில் இந்த நாவல் தொடராக சுமார் மூன்றரை வருடம் வந்ததாம். அக்கால மக்களின் பொறுமையை நாம் நிச்சயம் பாராட்டியேத் தீர வேண்டும். எனக்கு இத்தகைய நிலை உண்டானால் பைத்தியமேப் பிடித்திருக்கும்.
கிட்டதட்ட 10 நாட்கள் நேரம் கிடைக்கும் போது எல்லாம் படித்து முடித்து 2 வாரம் ஆகி விட்டது ஆனால் இன்னும் என் கனவில் வந்தியத் தேவரும், குந்தவைப் பிராட்டியும், அருள் மொழி வர்மரும், நந்தினியும், பூங்குழலியும், வானதியும், பழுவேட்டயர்களும், சுந்தரச் சோழரும் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்நாவலை படித்தவர்கள் அனைவருக்கும் இத்தகைய உணர்வுதான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இத்தகைய பாதிப்பை இந்த நாவல் உண்டாக்கவே இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள
net-இல் துளாவினேன். அதன் பயன் இந்த நாவல் net-இல் e-bookக்காக இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. பின் வரும் லிங்க்கினெ கிளிக்கி நீங்கள் இந்நாவலைப் படிக்கலாம்... ponniyin-selvan
ஆனால் என்னைக் கேட்டால் புத்தகம் வாங்கிப் படிப்பதுதான் சிறந்தது என்பேன்.
Subscribe to:
Posts (Atom)