Saturday, April 19, 2008

9-11

ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது என்னோட favorite subject எப்பவுமே கணக்கு தான்.
Maths ல வர சின்ன சின்ன விசயத்த பாத்து எல்லாம் நான் ரொம்ப ரசிப்பதுண்டு. அதுல ஒரு சின்ன விஷயம் தான் இது,

எந்த எண்ணையும் 9-ஆல் வகுக்கும் போது தசம (Decimal) இலக்கங்கள் எல்லாம் அந்த எண்ணின் 11 ன் மடங்காக இருக்கும்

1/9 = 0.11 11 11...
2/9 = 0.22 22 22 ...
3/9 = 0.33 33 33 ...

அதே போல் எந்த எண்ணையும் 11-ஆல் வகுக்கும் போது தசம இலக்கங்கள் எல்லாம் அந்த எண்ணின் 9 ன் மடங்காக இருக்கும்

1/11 = 0.09 09 09 ...
2/11 = 0.18 18 18 ...
3/11 = 0.27 27 27 ...

இதப்படிக்கிற பலபேர் இதெல்லாம் ஒரு விஷயம்னு சொல்லவந்துட்டான்னு தலைல அடிசுபீங்க...இன்னும் கொஞ்சம் பேர் அட பரவாயில்லையே interesting-ஆ இருக்கேன்னு நினைபீங்க. அப்படி நினைசிங்கனா அட வாங்க தலைவா நம்ம எல்லாம் ஒரே கட்சி :).

Saturday, April 5, 2008

வீரத் தமிழா உமக்கு தலை வணங்குகிறேன்


கர்நாடக்காவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வ்ன்முறைகளைக் கண்டித்து தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பேச்சு மிக அருமை.

ஆணித்தரமான புள்ளி விவரங்களுடன் அவருக்கே உரித்தான பாணியில் வெளிப்படுத்திய கவிஞர் அவர்களுக்கு ஒரு சலாம். உள்ளத்து குமுறல்களை மிகத் தெளிவான ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படுத்துவது எப்படி என்பதற்க்கு கவிப்பேரரசு அவர்களின் பேச்சு மிக சிறந்த உதாரணம்...

வீரத் தமிழா உமக்கு தலை வணங்குகிறேன்....

கவிப்பேரரசு வைரமுத்துவின் சொற்பொழிவை இங்கே காண்க...

http://youtube.com/watch?v=MLJ_FG7pUjg&feature=related

http://youtube.com/watch?v=ih8xCWf4pyA&feature=related