Sunday, March 23, 2008

காஃபி வித் அணு...

விஜய் டிவி-ல வர இயல்பான நல்ல நிகழ்சிகள்ள இதுவும் ஒன்னு. இத போல Talk Shows நிறையவே இருந்தாலும் இந்த நிகழ்சியோட high light-ஏ அணு தான். இந்தமாதிரி நிகழ்சிகளோட வெற்றி நிகழ்ச்சியில் கலந்துக்க வரவங்க கையிலும் இருக்குன்னாலும்
இந்த நிகழ்ச்சியில் அனுவோட பங்கு ரொம்ப பிரமாதம். வரவங்கட்ட ரொம்ப இயல்பா பேசி நான் ரொம்ப brilliant-ன்னு காமிக்க முயற்சி பண்ணாம அவங்கள நிறைய பேச வைக்கிறதுல அணு ஒரு specialist தான்.

Guest-எ நல்ல பேச encourage பண்றது மாதிரி இருக்குற அணுவோட குழந்தைத் தனமான சிரிப்பும், அவங்க காட்டுற சின்ன சின்ன பிரம்மிப்புகளும் இந்த நிகழ்ச்சிக்கு மெருகேற்றும் அம்சங்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக அணு பண்ணுற Home Work -ம் சூப்பர். வரவங்க வாழ்க்கைல நடந்த interesting-கான விசயங்கள சேகரிச்சு வச்சுகிறாங்க அணு. வர்ற Guest-ட்ட அத அப்பப்ப எடுத்து விட்டு அங்கள பிரமிக்க வக்கிறாங்க.

அதோட இவங்க செலக்ட் பண்ணுற ஜோடி கூட ரொம்ப கரெக்டா இருக்கும். அப்பறம் இந்த நிகழ்ச்சில வர ஆன் TV செக்மேன்ட், Rapid Fire round இது எல்லாம் கலக்கலா இருக்கு.
இப்படி இந்த நிகழ்ச்சிய பத்தி இப்படி பேசிகிட்டே போகலாம்.

எனக்கு ரொம்ப பிடிச்ச episodes ண்ணு பார்ததா,

1. SPB and கங்கை அமரன்

2. பிரகாஷ் ராஜ் and பிரித்வி ராஜ்

3. சூர்யா வந்த திபாவளி ஸ்பெஷல் episode

4. சென்னை 600028 gang

இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

ஏதோ YouTube தயவுல இந்த நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் அடிக்கடி பார்க்க முடியுது.

ஒர்குட்-ல அனுவோட Fan கிளப் ஒண்ணுகூட irukku...
http://www.orkut.com/Community.aspx?cmm=26378823

அவ்ளோ தான்...

1 comment:

ILA (a) இளா said...

:)
http://vivasaayi.blogspot.com/2008/02/blog-post_12.html