Sunday, September 28, 2008

எந்தக் கடையில... நீ அரிசி வாங்குற...



Overweight - IT துறையில் இருப்பவர்களின் தீராத தலை வலி. இத்துறையில் இருக்கும் நானும் இதற்கு விதிவிலக்கு இல்லை. என்னுடைய BMI விகிதம் 25 க்கு மிக அருகில் இருந்தாலும் இப்போது விட்டுவிட்டால் பின்னால் எடையைக் குறைப்பது ரொம்ப கஷ்டம் அப்படிங்கிற கிலி மனசுல இருந்துட்டே இருக்கு.

கழுத கெட்ட குட்டிசுவரு...Software engineer க்கு doubt ன்னா google search அப்படிங்கிற மாதிரி (பழமொழிய தப்ப use பன்னுரனானு தெரியல) ... உடற்பயிற்சியை தவிர வேற என்ன விஷயங்கள்ள கவனம் செலுத்தனும் அப்படின்னு தேட ஆரம்பிச்சேன்... பெரும்பாலான இடங்கள்ல உடற்பயிற்சியோடு முக்கியமா சொல்லப்படுற இன்னொரு விஷயம் வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolism Rate).

நம்மவர்களில் நிறைய பேர் ஒல்லியாகவோ குண்டாகவோ இருப்பதற்கு முக்கியக் காரணம் அவரவரின் Metabolism Rate தான் முக்கிய காரணமாம். தொடர்ச்சியான உடற்பயிற்சி Metabolism Rate- ஐ சீரான நிலைக்கு கொண்டு வரும் என்றாலும் அது மட்டும் போதாதாம். இதனால் தான் உடற்பயிற்சி செய்யும் சிலரால் கூட உடல் எடையை குறைக்க முடிவதில்லையாம். மேலும் Metabolism Rate- ஐ சீரான நிலைக்கு கொண்டு வருவதற்கு சில TIPS கள் இங்கே,

1. உடல் எடையை குறைப்பதற்காக fasting என்ற பெயரில் சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது. இது Metabolism Rate- ஐ குறைத்து விடும். விளைவு... "low calories burn". இதற்கு பதில் நாளுக்கு ஐந்து முதல் ஆறு முறை சாப்பிடுவது நல்லது... ஆனா அதுக்காக ஆறுமுறையும் ஜம்போ meals சாப்பிடக்கூடாதுங்க... இப்படி சொல்லுறதுக்கு முக்கிய காரணம் ரெண்டு meal -யுக்கு உள்ள இடைவேளை தோராயமாக 3 மணி நேரம் இருப்பது நல்லதாம்.

2. அநேகமாக நாம் அனைவரும் கேள்வி பட்ட ஒரு வைத்தியம்...
காலையில் இளம் சுடுநீரில் தேனை கலந்து பருகுவது. இதோடு எலும்பிச்சை சாரையும் கலந்து குடித்தால் Metabolism Rate என்று நம்பப்படுகிறது.

இதை நான் முயன்று பார்ப்பது என்று முடிவு செய்து விட்டேன்.

3. சீரான உடற்பயிற்சி...இது கண்டிப்பாக Metabolism Rate- ஐ கூட்டும்.
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடந்தால் கூட போதும்.

4. தேவையான அளவுக்கு தூங்குங்கள். நாம் தேவையான அளவுக்கு தூங்கவில்லை என்றாலும் Metabolism Rate குறைந்து விடுமாம்.

இப்படி list நீண்டுட்டே போகுதுங்க...ஆனா நான் இதோட நிறுத்திக்கிறேன்.



என்க்கு fitness பத்தி நினைக்கும் பொது எல்லாம் என் நண்பன் சொன்னது ஞாபகம் வரும்...software engineers எல்லாம் ஒரு நாளைக்கு 2 மணிநேரம் கூலி வேலை சையனும்னு சட்டம் கொண்டுவரனும் அப்ப தான் IT மக்கள் fit ஆகவும் இருப்பாங்க அதோட பணத்தோட அருமையும் அவங்களுக்கு தெரியும்னு சொல்லுவான்...

ஆனா என்னைப்பொருத்தவரை இந்த சட்டம் கொண்டுவந்தா என்ன நடக்கும் தெரியுமா? இப்ப credit card call வருவது மாதிரி ஒன்னொரு புது call வரும்...Sir நாங்க company A ல இருந்து call பண்ணுறோம்...உங்களுக்கு பதிலா 2 மணிநேரம் கூலி வேலை பாக்குறதுக்கு ஆள் arrange பண்ணுறோம் அதுக்கு நீங்க just Rs.1,000 மட்டும் pay பண்ணினா போதும்... அதுக்கு நம்ம ஆளு என்ன பதில் சொல்லுவார் தெரியுமா... Actually company B ல Rs.750 தான் charge பண்ணுறாங்க நீங்க ஜாஸ்தியா சொல்லுறிங்களே...

அது சரி இப்ப serious ஆன விஷயத்துக்கு வருவோம்...overweight பிரச்சனைய வெற்றிகரமா முறியடுச்சவங்க கண்டிப்பா நிறைய பேர் இருப்பிங்க...உங்கள்ள யாரவது useful tips தரலாமே...

2 comments:

சுந்தரவடிவேல் said...

திருக்குறளில் இருக்கும் மருந்து என்ற அதிகாரத்தில் இருக்கும் குறள்களைப் படிக்கவும்!

James said...

உபயோகமான தகவல்...நன்றி
சுந்தரவடிவேல்.