சந்தானம் மற்றும் கருணாசுக்கு ரொம்ப ஸ்கோப் இல்லாத படம் இது. சந்தானம் ஸ்பெசலான டபுள் மீனிங் ஜோக் ஒன்னே ஒண்ணுதான் இந்த படத்துல. அதையும் ரஜினி பயங்கரமா கண்டிக்கிறார். இந்த கண்ணடிப்பு படத்தில் மட்டும் உண்மையிலும் தான் என்பது போல். அதன் பின் சந்தானம் அடக்கி வாசிக்கிறார். உண்மையை சொல்லப்போனால் ஜஸ்ட் வந்து போகிறார். ரஜினிக்கு சந்திரமுகி தந்த படிப்பினையாக இருக்கலாம்.
நல்லவேளை எந்திரன் படத்தில் கமல் நடிக்கவில்லை. ஒரு காட்சியில் ரஜினி ஐஸ்வர்யாவிடம் தான் எந்திரன் இல்லை என்பதை நிரூபிக்க கையை கிழித்து இரத்தத்தை காண்பிக்கிறார் ரஜினி. இதுவே கமலாக இருந்திருந்தால் எதை காண்பித்து நிருபித்திருப்பார்? ( அவ்வைஷண்முகி அனைவருக்கும் நியாபகம் இருக்கும்) ஐஸ்வர்யாவின் கதி அதோ கதிதான் ;-}
படத்தின் முதல் பாடலில் ரஜினி ஐஸ்வர்யா இருவரின் வயதும் அப்பட்டமாய் தெரிகிறது. பாபா செகண்ட் பார்ட் போன்ற உணர்வு உண்டாகிறது. ஆனால் நல்லவேளையாக சுதாரித்துக்கொண்டார்கள் போலும் ஐஸ்வர்யாவின் வயது படிப்படியாய் குறைந்து வழக்கம் போல் தேவதையாக வலம்வருகிறார். ரஜினி? ( போங்க பாஸ் தலைட்ட நாம் இதையா எதிர்பார்க்கிறோம். தலை வயசானாலும் சிங்கம்ல).
எந்திரன் வரும் நடன காட்சிகளில் ரஜினி சிவாஜியை போல் ஆடுகிறார். அதுவும் பார்பதற்கு ரோபோ ஆடுவது போல் தான் இருக்கிறது :) (சிவாஜியின் ரசிகர்கள் என்னை மன்னிப்பார்களாக).
படத்திற்கு பிளஸ் ஆன விஷயங்கள்
- எந்திரன் வில்லனாக வரும் காட்சிகள். ரஜினி தனது பழைய வில்லத்தனத்தைதூசு தட்டி காண்பிக்கிறார். உண்மையிலேயே நீங்க சூப்பர் வில்லன் ரஜினி சார்.
- எந்திரன் செய்கிற ரொமான்ஸ் காட்சிகள்
- எந்திரன் பிரசவம் பார்க்கும் காட்சி
- குழந்தைகளை கவரும் கிராபிக்ஸ் காட்சிகள்
- எந்திரன் கடைசியில் தரும் பஞ்ச் மெசேஜ்
- பஞ்ச் டயலாக் சுத்தமாய் இல்லாமல் இருப்பது
- நல்லவேளை ரஜினியின் mentor ஆக வரும் வில்லன் சுமாராக தமிழ் பேசுகிறார். அவர் லுக்குக்கு சேட்டு தமிழ் தான் பேசுவார்னு வந்த பயம் நம்மை விட்டுஅகல்கிறது
படத்திற்கு நெகடிவான விஷயங்கள்
- ரஜினியின் குரலில் தெரியும் அவரது வயது. ஒருசில பாடல் காட்சிகளிலும்அவரின் முதுமை தெரிகிறது
- கொஞ்சம் இழுக்கப்பட்ட கிளைமாக்ஸ்
- ரஜினிக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத அம்மா அண்ட் அப்பா. மற்றும்ஐஸ்வர்யா சொல்லும் ஹாப்பி ஹோம் கொஞ்சம் ஒத்துகொள்ள முடியவில்லை
மொத்தத்தில் இது சிறுவர்கள் விரும்பும் ரஜினி படம். மற்றவர்கள் கண்டிப்பாக ஒரு முறை ரசிக்கலாம். எதிர்பார்ப்பு இல்லாம பார்த்திங்கன்னா கண்டிப்பா என்ஜாய் பண்ணலாம்.
No comments:
Post a Comment